யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு காப்பெட் இடும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி அகலமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அந்த வீதிக்கு காப்பெட் இடும் பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
அதனால் குறிகாட்டுவான் இறங்குதுறை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் குறிகாட்டுவான் இறங்குதுறை நுழைவாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அதேவேளை , எதிர்வரும் திங்கட்கிழமை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமையால் , ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் பெருமளவான பக்தர்கள் வருகை தர ஆரம்பிப்பார்கள் என்பதால் குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது








No comments