யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட வேளையில், நேற்றைய தினம் புதன்கிழமை அங்கு கூடிய கிராம மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து, அவர்களை அங்கிருந்த்து வெளியேற்றினர்.
அதன் போது, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை அடுத்து, தொல்லியல் திணைக்களத்தினரும் வெளிநாட்டு நிபுணர்களும் தமது ஆய்வு முயற்சிகளைக் கைவிட்டு, அங்கிருந்து திருப்பினர்.
அதேவேளை, குறித்த ஆய்வு குழுவினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மந்திரி மனை பகுதிகளில் தமது ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும் , தொடர்ந்து நெடுந்தீவு பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments