Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது


யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் 

அதன் போது ஒரு கடற்தொழிலாளர் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். 

கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை அனுமதி பத்திரம் இன்றியும் , வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களின் மூன்று படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர்களால் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

No comments