'காணாமல் போனமை உறுதிப்படுத்தல் சான்றிதழ்' களை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் நிதி நன்மைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஓ.எம்.பி யின் யாழ் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையிடலில் , காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் 'காணாமல் போனமை உறுதிப்படுத்தல் சான்றிதழ்' வழங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்துமாறும், அதன் சட்டரீதியான அங்கீகாரம் மற்றும் காலாவதித் திகதி தொடர்பில் காணப்படும் குறைபாடுகளை நீக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை இந்தச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள குடும்பங்கள் நிதி நன்மைகளைப் பெற முடியாமல் உள்ளதை காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ். இணைப்பாளர் சுட்டிக்காட்டினார்.
அதனை அடுத்து அது தொடர்பில் நீதி அமைச்சுடன் மேலதிக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகப் பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.





.jpeg)



No comments