Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.


இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் மாவட்ட செயலகமும் உறுதுணையாக நிற்கும் என யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். 

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பும் மகிழ்வான மறுமலர்ச்சி வலைப்பின்னலும் மறுமலர்ச்சி நோக்கிய ஐந்து நாள் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை வீதியிலுள்ள தொடர்பகம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார், மேலும் தெரிவிக்கையில், 

எமது மாவட்டத்தை பொறுத்தவரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அனைவரும் முனைப்புடன் செயற்பட்டுள்ளனர் 

சிறுவர்களை, இளைஞர்களை, யுவதிகளை வழிப்படுத்த வேண்டும். சமூகத்தில் இச் செயற்பாடுகளுக்கு முரண்பட்டு நிற்கின்ற வகுதியினரும் காணப்படுகின்றனர். அவர்களையும்  ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

கிராமங்களிலும் ஆரோக்கியமான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் 

 இளைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் மாவட்ட செயலகமும் உறுதுணையாக நிற்கும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்கலாநிதி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார், யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் முதன்மை ஆலோசகர் அருட்பணி பா.அன்றனி ஜேசுதாசன் அடிகளார்,  மற்றும் துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments