Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட 60 கைதிகள்


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து,நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதன் காரணமாக, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும் நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, பலத்த பாதுகாப்புடன் 60 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்

No comments