Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - அதிகரிக்கும் உயிரிழப்பு ; இன்றும் மூவர் உயிரிழப்பு


நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கடந்த 6 ஆம் திகதி காலையில் இரண்டாவது தடவையாகவும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக,  07 அதிகாரிகள் உயிரிழந்தனர். 

இந்த மோதலில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஆபத்தான நிலையிலிருந்த 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

அதில் சிகிச்சை பலனின்றி மேலுமொரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளார். 

அதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பூஸா சிறைச்சாலை மற்றும்  அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை ஆகிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 2 கைதிகளும் உயிரிழந்துள்ளனர். 

இதன் அடிப்படையில் , 08 அதிகாரிகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

No comments