Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் மக்களின் இதயக் காயங்களுக்கு அன்பும் நீதியும் மட்டுமே மருந்தாக அமைய முடியும்


தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி 'அன்பு' ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டு, மேற்குறிப்பிட்ட அனைத்து உதவிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருகின்றது.

இவை இறுதி முடிவுகள் அல்ல. இவை எமது முன்னோக்கிய பயணத்தின் சில முக்கியமான கட்டங்கள் மாத்திரமே. இன்னும் எமக்கு முன்னால் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நாம் கைவிடமாட்டோம்.

அத்தோடு, காணாமலாக்கப்பட்டோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் வேதனையானது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மாத்திரம் உரியது அல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பகிர்ந்தளிக்கப்பட்ட துயரம் ஆகும். 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மூத்த சகோதரர் 1988இல் காணாமல் போயிருந்ததையும், இன்றளவும் அவரது தாயார் தனது மகன் திரும்புவான் என்ற நம்பிக்கையில் போதி பூஜை நடத்தி வருகின்றார்.

தெற்கில் இராணுவ வீரர்களின் தாய்மார்கள் தமது பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல, வடகிழக்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டோ அல்லது ஒப்படைக்கப்பட்டதன் பின்னரோ காணாமலாக்கப்பட்டு, அவர்களது புகைப்படங்களைக் கைகளில் ஏந்தியவாறு வீதிகளிலும் குளிரிலும் தாய்மார்கள் போராடி வருவது தமக்குச் சுமக்க முடியாத வேதனையைத் தருகிறது

கடந்த காலத்தில் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் சிறை வாழ்க்கையையும் நேரடியாக அனுபவித்தவர்கள் என்ற முறையில், இங்குள்ள மக்களின் வேதனையும் கண்ணீரும் எமக்கு முழுமையாகப் புரிகிறது 

தென்னிலங்கையில் இடம்பெற்ற சூரியகந்த மாணவர் புதைகுழி போன்ற சம்பவங்கள் இன்னமும் முழுமையாக விசாரிக்கப்படாத போதிலும், வடக்கில் செம்மணியில் புதைக்கப்பட்ட மக்களின் எச்சங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான அனைத்து நிதி, பாதுகாப்பு மற்றும் மனிதவள வசதிகளை நமது அரசாங்கம் முன்னின்று செய்து கொடுத்துள்ளது 

தமிழ் மக்களின் இதயக் காயங்களுக்கு அன்பும் நீதியும் மட்டுமே மருந்தாக அமைய முடியும் என்றார்.

No comments