Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!


யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

கைதடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் ,சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கூட்டுறவுப் பணியாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 திகதி தென்மராட்சி மேற்கு, கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வைத்து இலங்கை இராணுவத்தால், கூட்டுறவுப்  பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை நினைவு கூரும் முகமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்  கைதடி சந்திப் பகுதியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுவருகிறது









No comments