Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி - 99 நாட்களில் 499 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது


செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாணய குற்றி ஒன்றும், சிறுவர்களுடைய ஆடைகளின் பொத்தான்களும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 99 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 499 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 494என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

நாளைய  தினம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது 







No comments