Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்


காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒதுக்கியுள்ளது என  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தனர் 

மேலும் தெரிவிக்கையில், 

காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. 

இதற்கான விசாரணைகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்த வருடம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அரசாங்க நியமனங்களுக்குத் தடை உள்ள நிலையிலும், பிரதமரின் செயலாளரின் விசேட அனுமதியுடன் எமது அலுவலகத்துக்கு 69 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

 இதற்கமைவாக தற்போது 47 பேர் சேவையில் இணைந்துள்ளதுடன், எஞ்சியோருக்கான நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வழங்கப்படவுள்ளன என தெரிவித்தனர்.

No comments