Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் முதலீட்டாளர்களுக்கு இருந்த சவால்கள் தடைகள் நீங்கியுள்ளன.


கடந்த காலங்களில் பல்வேறு தடைகள் மற்றும் சவால்கள் காரணமாக முதலீடு செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சில முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் திரும்பிச் சென்ற நிலை காணப்பட்டது. தற்போது அவ்வாறான தடைகள் படிப்படியாகக் களையப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமானது. 

 இத்திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 

தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் நாட்டின் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதுடன், சுற்றுலாவிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

இதனுடன், சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளை மேற்கொள்வதற்கும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த காலங்களில் பல்வேறு தடைகள் மற்றும் சவால்கள் காரணமாக முதலீடு செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சில முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் திரும்பிச் சென்ற நிலை காணப்பட்டது 

 தற்போது அவ்வாறான தடைகள் படிப்படியாகக் களையப்பட்டுள்ள இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி மேலும் பல முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு வந்து முதலீடு செய்ய முன்வர வேண்டும் 

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகளையும் அவற்றின் ஆரோக்கியப் பண்புகளையும் அறிமுகப்படுத்துவதற்கும் இவ்வுணவுத் திருவிழா சிறந்த வாய்ப்பாக அமைகின்றது 

காலப்போக்கில் பல பாரம்பரிய உணவு வகைகள் எமது அன்றாட வாழ்விலிருந்து மறைந்து வருவதாகவும், அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தவும் புதிய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் இவ்வாறான நிகழ்வுகள் உதவும். 

எதிர்காலத்தில் மேலும் அதிகளவிலான சுற்றுலாவிகளை யாழ்ப்பாணத்துக்கு ஈர்ப்பதற்கும், யாழ்ப்பாணத்தின் உணவுப் பண்பாட்டை சுற்றுலாத்துறையின் ஒரு முக்கிய வளமாக மேம்படுத்துவதற்கும் இவ்வாறான நிகழ்வுகள் பங்களிக்கும் என ஆளுநர் தெரிவித்தார்.

No comments