Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திருநெல்வேலியில் டெங்கு பரவும் சூழலை பேணிய 08 பேருக்கு 80 ஆயிரம் தண்டம்


யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் 08 பேருக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் , திருநெல்வேலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரையில் பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கள தரிசிப்புக்களின் போது, டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணியமை , வீடுகளில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட , 09 வீட்டு உரிமையாளர்கள் இனம் காணப்பட்டு , அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 08 உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , அவர்களுக்கு தலா 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. 

அதேவேளை மன்றில் முன்னிலையாகாத நபருக்கு அழைப்பு கட்டளை அனுப்ப மன்று கட்டளையிட்டது. 

No comments