Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பேருந்தில் தவறவிட்ட 10 இலட்ச ரூபாய் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி , நடத்துனருக்கு குவியும் பாராட்டுக்கள்


பேருந்துக்குள் தவற விட்ட சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான நகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

பருத்தித்துறை சாலைக்கு( டிப்போ) சொந்தமான பேருந்தில் வட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்கு பெண்ணொருவர் பயணித்துள்ளார். 

பேருந்தில் இருந்து இறங்கி மரண சடங்குக்கு சென்ற நிலையில் , அங்கு , தனது கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்க சங்கிலி காணாமல் போனதை உணர்ந்துள்ளார் 

 பல இடங்களிலும் தேடியும் சங்கிலி கிடைக்காத நிலையில் , மீண்டும் தனது வீடு திரும்பும் போது , தான் முன்னர் பயணித்த பேருந்தில் ஏறியுள்ளார். 

நடத்துனரிடம் தனது சங்கிலி தொலைந்த விடயத்தை கூறிய போது , அவர் முதல் அமர்ந்து இருந்த ஆசனத்தில் சங்கிலி காணப்பட்டதாக கூறி , சாரதியும் நடத்துனரும் இரண்டரை பவுண் சங்கிலியை அப்பெண்ணிடம் கையளித்துள்ளனர் 

பின்னர் டிப்போவிற்கு சென்று பேருந்தை சுத்தம் செய்தவேளை , பேருந்தின் ஆசனத்தின் கீழ் இருந்து சங்கிலியின் "S" வடிவத்தையும் கண்டெடுத்து , உரியவரை தொடர்பு கொண்டு அத்தனையும் ஒப்படைத்துள்ளனர் 

உரிவரிடம் நகையை ஒப்படைத்த பேருந்து சாரதியான மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துனரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் 


No comments