யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் அமையவுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், யாழ்ப்பாண மாநகர முதல்வர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.





















No comments