Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கண்ணை பறித்த மின்னொளி அலங்காரம் - 237 பேர் வைத்தியசாலையில்


யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் கண்ணை பறிக்கும் மின்னொளி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வரையில் 237  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் பாதிப்படைந்தவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து கொண்டு இருப்பதாகவும்  வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








No comments