Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பிரபல வர்த்தக நிறுவனத்தின் கோண்டாவில் கிளையின் வியாபர உரிமம் இரத்து


இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு , யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில் , பொது சுகாதார பரிசோதகரால் , அது கண்டறியப்பட்டு , நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி வைத்திருந்த இதே குற்றச்சாட்டுக்கு , கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் , நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டு , தண்ட பணம் செலுத்தப்பட்ட விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது 

அதனை அடுத்து,  குறித்த விற்பனை நிலையத்தின் வியாபார உரிமத்தை இரத்து செய்த மன்று , அந்த உத்தரவை நல்லூர் பிரதேச சபைக்கு அனுப்புமாறும் கட்டளையிட்டது. 

குறித்த விற்பனை நிலையமானது , இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளை என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments