யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆவது நாளான இன்றைய தினம் வரையிலான 50 நாட்களில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் முதலாம் கட்டமான 09 நாட்கள் மற்றும் இரண்டாம் கட்டமான 45 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட என முதல் இரு கட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 54 நாட்கள் அகழ்வு பணிகளின் போது , 240 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தொடங்கிய நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை 50 ஆவது நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
அதன்போது, 05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் , முதலாம் இரண்டாம் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட , 240 என்புக்கூடுகளுடன் , மூன்றாம் கட்டத்தின் 50ஆவது நாள் வரையில் அடையாளம் காணப்பட்ட 304 என்புக்கூடுகளுமாக இதுவரையில் 544 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 530 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும் இன்றைய தினமும் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சான்று பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் சிலவற்றை உத்தியோகபூர்வ புகைப்படங்கள் இன்றைய தினம் எடுக்கப்பட்டு , அந்த புகைப்படங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









No comments