Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காங்கேசன்துறை மேற்கு ஐயனார் ஆலய திருவிழா: குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஐயனார்


யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை மேற்கு ஐயனார் ஆலய கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு ,சங்காபிசேகமும் , ஐந்தாம் திருவிழாவும் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , சங்காபிசேகம் நடைபெற்று , தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஐயனார் , பூரணை மற்றும் புட்கலை சமேதரராய் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்ததுடன் . வெளி வீதியுலா வந்தார். 

மேலும் வருடாந்த மகோற்சவ அலங்கார திருவிழாவானது கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானதோடு வியாழக்கிழமை  ஐந்தாம் திருவிழாவானது  ஊராவிலை சேர்ந்த சின்னையா குருசாமி குடும்பத்தின் உபயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றதுடன் கும்பாபிஷேக தினமும் சின்னையா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இனிதே நடைபெற்றது .

34 வருடங்களின் பின்னர் கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றதோடு கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேக நிகழ்வுகள் அப்பகுதி மக்களின் பங்களிப்புடன்  நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது









No comments