Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கையில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு: யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களுக்கு எச்சரிக்கை


இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு மோசமடைந்துள்ளதாக சர்வதேச காற்றுத் தரக் கண்காணிப்பு நிறுவனமான IQAir வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளியிடப்பட்ட நிகழ்நேரத் தரவுகளின்படி, நாட்டிலேயே அதிக காற்று மாசுபாடு பதிவான நகரமாக யாழ்ப்பாணம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் காற்றுத் தரச் சுட்டெண் (AQI) 142 ஆகப் பதிவாகியுள்ளதுடன், புத்தளத்தில் 119 ஆகவும், அனுராதபுரத்தில் 115 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, தலைநகர் கொழும்பில் காற்றுத் தரச் சுட்டெண் 102 ஆகப் பதிவாகியுள்ள நிலையில், அதிக காற்று மாசுபாடு காணப்படும் நகரங்களின் பட்டியலில் கொழும்பு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்க காற்றுத் தரச் சுட்டெண் வகைப்பாட்டின்படி, 101 முதல் 150 வரையான அளவுகள் உணர்திறன் அதிகமுள்ள தரப்பினரின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையாகக் கருதப்படுகின்றன.

குறிப்பாக, சிறுவர்கள், முதியவர்கள், சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய காற்று மாசுபாட்டினால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக காற்றுத் தரக் கண்காணிப்பு வரைபடம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், காலநிலை மாற்றங்கள், காற்றின் திசை மற்றும் வேகம் உள்ளிட்ட காரணிகளால் காற்றின் தரம் நாளின் வெவ்வேறு நேரங்களில் மாற்றமடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காற்று மாசுபாடு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாச நோயாளிகள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

No comments