Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு அரசசார்பற்ற நிறுவனத்தின் ஆயிரம் மில்லியன்


யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்த ஆண்டு, ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி செலவிடப்பட்ட வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். 

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான கலந்தாய்வு யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழில் உள்ள  தனியார் விடுதியில் நடைபெற்றது.அதன் போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ரூ.2,500 மில்லியன் அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 4,500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காக கணிசமான நிதி மற்றும் வளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன. 

இதன்படி, 1,000 மில்லியனுக்கும் அதிகமான நிதி இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

எனவே, அரசாங்கத்தின் நிதி வளங்களுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி, தொழில்நுட்ப அறிவு மற்றும் மனிதவளப் பங்களிப்புகளையும் முறையாக ஒருங்கிணைத்து, மாவட்டத்தின் முன்னுரிமைத் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் அபிவிருத்திப் பணிகளின் பயனையும் தாக்கத்தையும் மேலும் அதிகரிக்க முடியும்

ஒரே பிரதேசத்தில் ஒரே வகையான திட்டங்கள் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுவதைத் தவிர்த்து, மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களிடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என மாவட்ட செயலர் தெரிவித்தார் 

குறித்த கலந்தாய்வில் 9 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் 24 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் என மொத்தம் 33 அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது திட்ட முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளை முன்வைப்புக்கள் (Presentation) ஊடாக   சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments