Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். அரியாலை கிணற்றிலிருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு!


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறொன்றில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அரியாலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் காணப்பட்ட கிணற்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்து இறைத்த போது , கிணற்றினுள் இருந்து உரைப்பை மூட்டைகள் மீட்கப்பட்டன. 

அவற்றினை மேலே எடுத்து சோதனையிட்ட போது , அவற்றினுள் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதை அடுத்து , அது தொடர்பில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது, 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன் , அவற்றினை மீட்க நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற அனுமதியினை பெற்று , பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியுடன் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர், 





No comments