Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் இயற்கைப்பேரிடரால் மரணித்தவர்களா?


தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் செம்மணியில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா 150 பக்கங்களை கொண்ட இடைக்கால அறிக்கையை மன்றில் சமர்த்துள்ளார்.

குறித்த அறிக்கையில், 

செம்மணியில் காணப்பட்ட அடக்கங்களின் தன்மை மற்றும் குணாதிசயம் குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. 

ஆனாலும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் தொடர்புடைய சூழல் சான்றுகள், முறையான அடக்க முறைகளைக் கொண்டமைக்கான அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது 

அடக்கங்களின் செறிவு ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரின் விளைவான அடக்கமாக இருக்கலாம்.

ஆனாலும், சடலங்கள் எந்தச் சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதை முறையாகவும், துல்லியமாகவும் நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரப்பூர்வ விடயங்கள் தென்படவில்லை.

ஆடைகள் இல்லாமை ஏன்?

செம்மணியில் மீட்கப்பட்ட, என்பு எச்சங்களுடன் இணைந்த நிலையில் ஆடைகள் காணப்படவில்லை. அதற்காக ஆடையின்றி அடக்கம் செய்யப்பட்டனர் என்ற முடிவுக்கு வரமுடியாது. 

துணிகள் உள்ளிட்ட பொருட்கள், சாதகமற்ற அடக்கச் சூழல்களில் சிதைவடையக்கூடிய வாய்ப்புண்டு. 

அப்பகுதி, மண்ணின் பண்புகள், நுண்ணுயிர்களின் செயல்பாடு மற்றும் அடக்கம் செய்யப்பட்ட கால அளவு ஆகியவற்றால் சிதைவடையலாம்.

ஆனாலும், சில சந்தர்ப்பங்களில், பொத்தான்கள், வளையங்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் சிறிய உலோகப் பொருத்திகள் (ஊக்)  ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 

அவை ஆடை அணிந்திருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளாக கொள்ளலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

அதேவேளை, குறித்த அறிக்கையின் பிரதிகளை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு வழங்க மன்று உத்தரவிட்டுள்ளது.

அந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி, நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் , குறித்த அறிக்கை தொடர்பிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு, அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments