Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தில் சிறப்பான முன்னேற்றம்


வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் நிதிப் பயன்பாட்டில் இம்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்றைய  புதன்கிழமை ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது

அதன் போது, ஒவ்வொரு திணைக்களத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், அவற்றின் தற்போதைய முன்னேற்றம், நடைமுறைப்படுத்தலில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகள் தனித்தனியாக ஆராயப்பட்டன.

கடந்த மாத முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் காணப்பட்ட நிலவரத்துடன் ஒப்பிடுகையில், மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் இம்முறை சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியதுடன், ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாகவும் உரிய காலப்பகுதிக்குள்ளும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்காக அடுத்த ஆண்டில் அண்ணளவாக 1,700 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலை தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

 இதனடிப்படையில், தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி ஆணைக்குழுவிடம் இவ்விடயத்தை விசேடமாக முன்வைப்பதுடன், மத்திய சுகாதார அமைச்சிடமும் தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கலந்துரையாடப்பட்டது.

No comments