Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு - 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள பேருந்துகள்


யாழ்ப்பாணம் - மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முதல்  5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.

அதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் மாற்று வழித்தடத்தின் ஊடாக சேவைகளை தொடரும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 

சங்குப்பிட்டி பாலம் மூடப்படும் காலப்பகுதியில் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இதன்படி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து பூநகரி நோக்கி வரும் பேருந்துகள், பூநகரியிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தி, அதே வழித்தடத்தின் ஊடாக மீண்டும் பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் 

மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக பேருந்துகளின் பயணத் தூரம் சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும்.

 அதிகரிக்கும் பயணத் தூரத்தை கருத்திற்கொண்டு, சிறிய அளவிலான பேருந்துக் கட்டண உயர்வு ஏற்படக்கூடும் எனவும், இதனை பயணிகள் கருத்திற்கொள்ள வேண்டும்.

எனவே, நாளை முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சங்குப்பிட்டி பாலத்தைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழித்தடம் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பேருந்து சேவைகள் சீராக இடம்பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தனது ஊடக அறிக்கையில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்

No comments