Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கைத் தமிழ் சினிமாத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் - குவியம் விருது விழாவில் கடற்தொழில் அமைச்சர்


கலைத்துறைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் குவியம்  விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

இலங்கைத் தமிழ் சினிமாத் துறையின் படைப்பாற்றலையும், கலைஞர்களின் திறமைகளையும் அங்கீகரிக்கும் வகையில், ஐந்தாவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘குவியம் விருது’ விழா நேற்றைய தினம் சனிக்கிழமை  யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்த பின்னர் , உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

எமது கலைத்துறைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் விருதுகளை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது கலைத்துறையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்களது படைப்புகள் தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும்.

 அதேவேளை, தமிழ் சினிமாக் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு உரிய மதிப்பையும் வாய்ப்பையும் வழங்கும் வகையில் இவ்விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த ‘குவியம்’ குழுவினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைத் தமிழ் சினிமாத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இத்தகைய அர்த்தமுள்ள முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், அவற்றின் எதிர்கால வெற்றிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார் 











No comments