Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தென்மராட்சி பண்பாட்டுப் பெருவிழா


வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் , சாவகச்சேரி நுணாவிலிலிருந்து நிகழ்விடம் வரை தமிழர் கலாசாரங்களை பறைசாற்றும் மரபு சார்  ஊர்தி பவனி நடைபெற்றது 

தொடர்ந்து அமரர் கலாபூசணம் வேலாயுதர் விநாசித்தம்பி அரங்காக நிகழ்வரங்காக அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன

நிகழ்வில் கலைச்சாகரம் மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கி கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர் முருகேசு சிவகுமாரி, சாவகச்சேரி பிரதேச வைத்திய அதிகாரி பசுபதி அச்சுதன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஸ்ணானந்தன், நட்சத்திரமஹால் உரிமையாளர் தம்பிராசா பரமானந்தம், சிற்பக்கலை கலைஞர் கலாபூசணம் கிரிஸ்ணபிள்ளை கலாமோகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.














No comments