தியாக தீபம் திலீபனின் திருவுருவ சிலையை பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் பரப்படுத்தியுள்ளனர்.
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் காணப்பட்ட தியாக தீபத்தின் திருவுருவ சிலையை கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் எடுத்து சென்று இருந்தனர்.
இந்நிலையில் குறித்த சிலையை யாழ் . நீதவான் நீதிமன்றில் பொலிஸார் பரப்படுத்தியுள்ளனர்.
தியாக தீபத்தின் சிலை வைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில் , அடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்
இந்நிலையில், யாழ்.மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட 06 பேரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பெற்றுள்ள நிலையில், இன்றைய நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் மற்றும் தியாக தீபத்தின் ஆவண காப்பக செயற்பாட்டாளர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோரிடம் மூன்று மணி நேர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது





.jpeg)



No comments