Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திரையரங்கில் துப்பாக்கி உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்கள் - ஒருவர் கைது


கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திரையரங்கினுள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு போர் 12 துப்பாக்கி, போர் 12 ரக தோட்டாக்கள் 398, போர் 16 ரக தோட்டாக்கள் 278, பொயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments