Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்த பருத்தித்துறை ஹாட்லி மைந்தர்களின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல்


யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லியின் மைந்தர்களது 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டுள்ளது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி, கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகிய நான்கு பேரின் 27 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம்-குணரட்ணம் அவர்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அனுஷ்டிக்கபட்டது.

இதன்போது அவர்களுக்கு விருப்பமான சிற்றுண்டிகள் படையலிடப்பட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு கூரப்பட்டது. தொடர்ந்து படையிலடப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் மாலை, பூக்கள் என்பன கடலில் விடப்பட்டன.

இந்நிகழ்வில், உயிரிழந்த மாணவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் அதிபர் மற்றும் பருத்தித்துறை நகரபிதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments