Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உயிரிழந்த ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்


பருத்தித்துறை இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள கடும் குருதித்தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் ஹாட்லியின் மைந்தர்களின் நினைவு இரத்ததான முகாம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறையிக் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி - இன்பர்சிட்டி கடற்பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனின் 22 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இவ் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படிருந்தது.

ஹாட்லிக் கல்லூரி மற்றும் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் இரத்ததான முகாமானது ஹாட்லிக் கல்லூரியில்  இடம்பெற்றது.

பருத்தித்துறை இரத்த வங்கி மருத்துவர் சந்திரகாந்த் தலைமையிலான மருத்துவ குழுவினரது பங்கேற்பில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட தன்னார்வ குருதுக்கொடையாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று குருதிக்கொடை வழங்கியிருந்தனர். 

முன்னதாக ஹாட்லியின் மைந்தர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது








No comments