Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு மாகாணத்தின் 134 இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்தத் திட்டம்!


வடக்கு மாகாணத்தின் ஆறு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 134 இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்த வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. 

குறித்த கலந்துரையாடலில், வீதிப் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியபோது, பிரதான வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகைகளைப் பொருத்துமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்தனர்.

 இதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், பல்வேறு இடங்களில் இது தொடர்பான மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஆறு சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளுக்கு உட்பட்ட 134 இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்த வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். 

இக்கமராக்கள் வேகக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதுடன், குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உதவும் எனக் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் விசேட கோரிக்கையை முன்வைப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று, சாரதிகளிடம் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான திடீர் பரிசோதனைகளை வடக்கு மாகாணம் முழுவதிலும் பரவலாக முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதற்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான ஆள்மாறாட்டம் மற்றும் பொலிஸாருடனான தொடர்புகள் குறித்த தகவல்களையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதிவேக மோட்டார் சைக்கிள்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கைப்பற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகவும் கால இடைவெளிகளில் மீண்டும் முன்னெடுக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

 வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் திடீர் பரிசோதனைகளை நடத்துவதற்கும் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

No comments