மாவீரர் வாரம் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு மாவீரர் நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக மாணவர்கள் மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
வலி.தெற்கு பிரதேச சபை முன்றலில் மாவீரர் நினவாலயம் அமைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது
வலி.வடக்கில் தெல்லிப்பழை சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாயாலத்தில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது
வடமராட்சி பகுதியில் , முதல் மாவீரரான சங்கரின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள இல்லத்தின் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீருவிலில் அமைந்திருந்த மாவீரர் சதுக்கத்திலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சி , தென்மராட்சி , வலிக்காமம் மற்றும் தீவகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் மாவீரர் நினைவேந்தல்கள் ஆரம்பமாகியுள்ளன.
எதிர்வரும் நாட்களில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்புக்களும் நடைபெறவுள்ளன.
அதேவேளை மாவீரர் துயிலுமில்லங்கள் , மாவீரர் நினைவாலயங்கள் என மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் , மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு நினைவு மணி ஒலிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு , பிரதான ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாவீரர்களுக்கான சுடர்கள் தொடர்ந்து ஏற்றப்படும்.





















No comments