Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

28,341 வீரர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய நல்லூர் மாவீரர் நினைவு வளாகம் திறந்து வைப்பு


மண்ணில் விதையாக வீழ்ந்தவர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் நல்லூர் மாவீரர் நினைவு வளாகம், நேற்றைய தினம்  சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. 

1982 ஆம் ஆண்டு முதல் எமது விடுதலை அமைப்பில் இணைந்து விதையாகியவர்களின் விபரங்களுடன், தனிக்குழுக்களாகவும், ஈரோஸ் அமைப்பிலிருந்தும், எல்லை வீரர்களாகவும், உதவி வீரர்களாகவும், நாட்டுப்பற்றாளர்களாகவும், மாமனிதர்களாகவும் விதையாகியவர்களின் விபரங்களையும் உள்ளடக்கி இவ் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

67 நினைவுக் கல்லறைகளில் 28,341 வீரர்களின் பெயர் விபரங்களும், அவர்களுக்குரிய தனித்துவ அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாவீரர் நாள் வரலாறு, துயிலுமில்ல வரலாறு, துயிலுமில்லங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் பல்வேறு புள்ளிவிபரங்கள் எனப் பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஆவணப் பெட்டகமாகவும் இவ் வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தமது பிள்ளைகளின் புகைப்படங்களைப் பொதுமக்களின் அஞ்சலிக்காகக் காட்சிப்படுத்துவதற்கான வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.










No comments