Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமராட்சியில் டெங்கு பரவும் சூழலைப் பேணிய 27 ஆதன உரிமையாளர்களுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா தண்டம்


வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு பரவும் சூழலினை பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 27 ஆதன உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

வடமராட்சி பிரதேசத்திற்குபட்ட துன்னாலை, அல்வாய் மற்றும் உடுப்பிட்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு களத்தரிசிப்பின் போது வீட்டு சூழலில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகும் சூழலினை பேணியமை கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் துன்னாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 08 குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும், அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும், உடுப்பிட்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 04 குடியிருப்பாளர்களுக்கு எதிராகவும் 

தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 27 ஆதன உரிமையாளர்களும் மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தலா பத்தாயிரம் ரூபா வீதம் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா தண்டப்பணம் மன்றினால் விதிக்கப்பட்டது.

No comments