Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறையில் டெங்கு சோதனை: 284 இடங்களில் 118 இடங்கள் நுளம்பு பெருகும் அபாயம்


பருத்தித்துறையில் நுளம்பு குடம்பிகள் காணப்படும் வகையில் சூழலினை பேணிய 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில், சமூக மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது

இச்செயற்றிட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து பங்குபற்றினர்.

இதன்போது, குறித்த கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விரிவான களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மொத்தமாக 284 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 118 இடங்கள் நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களாக அடையாளம் காணப்பட்டன. மேலும், 16 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், நுளம்புக் குடம்பிகள் காணப்படும் வகையில் சுற்றாடலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது





No comments