Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

188 புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்த யாழ். மாணவனுக்கு மக்கள் வங்கி தெல்லிப்பளை கிளையினால் பாராட்டு


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 188 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ். தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவன் சுரேந்தர் சபீனுக்கு மக்கள் வங்கியினால் பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் வங்கி தெல்லிப்பளை கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபரின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் மாணவன் சுரேந்தர் சபீனுக்கு மக்கள் வங்கியின் யாழ் உதவிப் பிராந்திய முகாமையாளர் பணப் பரிசுக்கான சான்றிதழை வழங்கினார்.

இந்த நிகழ்வில், யாழ். தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய பன்னிரெண்டு மாணவர்களும் பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன், மக்கள் வங்கியின் யாழ் உதவிப் பிராந்திய முகாமையாளர், தெல்லிப்பளைக் கிளை முகாமையாளர், மற்றும் தெல்லிப்பளை கிளை உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

No comments