Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தண்டப்பணம் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை – நீர்வேலி டெங்கு சோதனையில் சிக்கிய 16 பேருக்கு நீதிமன்றம் உத்தரவு!


யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவாகக் குடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வேலைத் தளங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேருக்குத் தலா ரூபா பத்தாயிரம் வீதம் தண்டம் விதிக்கப்பட்டதோடு, தண்டத்தைச் செலுத்தத் தவறின் ஒரு மாதகால சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையில், பொது சுகாதார பரிசோதகர்கள் இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலீசார் இணைந்து நீர்வேலி பகுதியில் இம் மாதம் 14 ம் திகதி டெங்கு தரிசிப்பை மேற்கொண்டனர். 

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒலிபெருக்கி வாகனம் மூலம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, நுளம்பு பெருக்ககூடிய கொள்கலன்கள் அகற்றப்பட்டு, ஆபத்தான இடங்களும் அடையாளம் காணப்பட்டு சுத்திகரிக்கப்பட்டன. 

இந்த நடவடிக்கையின் போது, டெங்கு பரப்பலுக்கு ஏதுவான நிலையில் குடம்பிகள் இனங்காணப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் வேலைத் தளங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி என். உசைன் முன்னிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் தம் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, தலா பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதோடு, தண்டத்தைச் செலுத்தத் தவறின் ஒரு மாதகால சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது


No comments