யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 09ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை , விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்ட நிலையில் யாழப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில் சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்டதை அடுத்து , யாழ் போதனாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.









No comments