தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தின் ஆரம்பத்தில் பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது
நிகழ்வில் பிரதம விருந்தினராக பௌதீகவியல் ஆசிரியர் இராஜரட்ணம் குமரனும் , சிறப்பு விருந்தினர்களாக பட்டயப் பொறியியலாளர் நவரட்ணம் நந்தரூபன் மற்றும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்
தியாக தீபம் திலீபன் , யாழ்ப்பாண இந்துக்கல்லூரி பழைய மாணவனும் , சிறந்த சதுரங்க வீரருமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.













No comments