Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியாவில் இருந்து பாடசாலைப் பையில் கசிப்பு கடத்தல்: அனலைதீவில் நபர் கைது


வவுனியாவில் இருந்து அனலைதீவுக்கு பாடசாலை பையினுள் சட்டவிரோத மதுபானத்தை, மறைத்து எடுத்த சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் 

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பினை , பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையினுள் மறைத்து அனலைதீவுக்கு எடுத்து வந்த 30 வயதுடைய நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர் 

ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் இறங்குதுறையில் இருந்து அனலைதீவு நோக்கி பயணித்த பயணிகள் படகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நபர் ஒருவர் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , படகு அனலைதீவு பகுதியை சென்றடைந்ததும் , குறித்த நபரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி அவரது உடமைகளை சோதனையிட்டனர். 

அதன் போது குறித்த நபர் கொண்டு வந்த பாடசாலை பையினுள் ஒன்றரை லீட்டர் கசிப்பு காணப்பட்டதை அடுத்து , அந்நபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments