Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

12ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பம்!


"யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" 12ஆவது முறையாக எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

அது தொடர்பில் ஏற்பாட்டளர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சினிமாவின் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளை ஆராய்வதற்கான பக்கச்சார்பற்ற ஒரு தளமாகச் செயற்படும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் முதன்மை நோக்கம், சுயாதீன சினிமாவைக் கொண்டாடுவதாகும்.

அதேவேளை, பிற கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், சினிமா ஊடாக சகவாழ்வையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதும், இளம் திரைப்படப் படைப்பாளிகளின் முதல் திரைப்படங்களையும் குறும்படங்களையும் திரையிடுவதன் மூலம் அவர்களை ஊக்குவிப்பதும் இவ்விழாவின் நோக்கங்களாகும்.

அஜெண்டா 14 (Agenda 14) வழங்கும் இவ்விழாவின் பிரதான அனுசரணையாளர்கள் சிலோன் தியேட்டர்ஸ் (Ceylon Theatres), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஜீவா எடுகேஷன் (Jeewa Education) ஆகியோராவர். கோதே நிறுவனம் (Goethe-Institut), பிரான்ஸ் தூதரகம், அலியான்ஸ் பிரான்செஸ் (Alliance Française), கியூபா தூதரகம், சரசவி பதிப்பகம் (Sarasavi Publishers), கலம் – கலாசாரச் சந்திப்புகளுக்கான வெளி (Kälam – A Space for Cultural Encounters) ஆகியவையும் JaffnaICF 2026 உடன் பங்காளர்களாக இணைந்துள்ளன.

விழாவின் திரையிடல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ரீகல் சினிமா (கார்கில்ஸ் சதுக்கம்), கலம் – கலாசாரச் சந்திப்புகளுக்கான வெளி ஆகிய இடங்களில் இடம்பெறும்.

இவ்வருட விழாவில் முழுநீளத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 50 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. பிரான்ஸ், இத்தாலி, பங்களாதேஷ், இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சவூதி அரேபியா, ஜேர்மனி, தாய்வான், கனடா, ஈரான், கியூபா, இலங்கை உள்ளிட்ட 15இற்கும் மேற்பட்ட நாடுகளின் படைப்புகள் இதில் இடம்பெறுகின்றன. திரையிடல்களுக்கு மேலதிகமாக, சினிமா தொடர்பான சிறப்பு நிபுணத்துவ வகுப்பு (Masterclass) அமர்வுகளும் விழாவுடன் இணைந்து நடைபெறவுள்ளன.

ஜேர்மன் திரைப்படப் படைப்பாளிகளான ஜூலியா லெம்கே, அன்னா கொக் ஆகியோர் இயக்கிய 'சர்க்கஸ்பாய்' (Circusboy | 86 நிமிடங்கள் | 2025 | ஜேர்மனி) ஆவணத் திரைப்படத்துடன், 02ஆம் திகதி விழா ஆரம்பமாகிறது. 

ஜேர்மனியின் கடைசிப் பெரும் சர்க்கஸ் இயக்குநர்களில் ஒருவரான தனது பூட்டனாரிடமிருந்து தனது முன்னோர்களின் கதைகளைக் கேட்டபடியும், விலங்குகளும் உறவுகள் நிறைந்த பெரிய குடும்பமும் சூழ வளரும் 'சான்டினோ' எனும் சர்க்கஸ் சிறுவனைச் சுற்றியே இத்திரைப்படம் நகர்கிறது. யதார்த்தத்துக்கும் மாயாஜாலத்துக்கும் இடையே ஊசலாடும் ஒரு சர்க்கஸ் குடும்பத்தின் வாழ்க்கையை இப்படம் உயிர்ப்புடன் சித்தரிக்கிறது.

எதிர்வரும் 06ஆம் திகதி மாலை நடைபெறும் விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து, இலங்கைத் திரைப்படப் படைப்பாளியான லலித் ரத்நாயக்க இயக்கிய 'ரிவர்ஸ்டோன்' (Riverstone | 119 நிமிடங்கள் | 2025 | இலங்கை) நிறைவுத் திரைப்படத்தின் திரையிடலுடன் விழா நிறைவடையும்.

No comments