சங்கானை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் சங்கானை தேவாலய வீதியில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற மானிப்பாய் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் , சந்தேக நபரிடமிருந்து 15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments