கொழும்பு கல்கிஸ்ஸ பகுதியில் இணையத்தளத்தில் விளம்பரம் செய்து சிறுமியை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்கொட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது தாயாரிடம் இருந்து பெற்றுவந்த கல்கிசை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சிறுமியின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சிறுமியை விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த கல்கிசை பொலிஸார் சிறுமியை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் தாயாரிடமும் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். சிறுமியை வாங்கியவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்







No comments