கோப்புப்படம்
முல்லைத்தீவில் உலரவிடப்பட்ட நெல்லுக்கு விஷமிகள் தீ மூட்டியமையால் , அவை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மாந்தை கிழக்கு கருப்புள்ளியான் கிராமத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் எனும் விவசாயி தனது வயலில் அறுவடை செய்த நெற்களை நெல் உலரவிடும் தளத்தில் உலர விட்டிருந்தார்.
அந்நிலையில் நேற்றிரவு விஷமிகள் அவற்றுக்கு தீயிட்டுள்ளனர். இதனால் உலர விடப்பட்டிருந்த நெல் முற்றாக எரிந்து போயுள்ளது. அதனால் விவசாயி பல ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.







No comments