Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நுணாவில் IOC யில் சனிக்கிழமை சட்டத்தரணிகளுக்கும், J/303 முதல் J/330 வரையிலான கிராம மக்களுக்கும் எரிபொருள் விநியோகம்!


யாழ்.தென்மராட்சி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை QR Code அடிப்படையில்  தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள J/303 முதல் J/330 வரையான கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக வாகனத்தின் கடைசி இலக்கம் 0,1,2 ஆக உள்ள வாகனங்களுக்கு பெற்றோல்  விநியோகிக்கப்படவுள்ளது.

எனவே கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்துவதற்காக கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை மற்றும் வாகனத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்தை பெட்ரோல் பெற வருபவர்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்  விடயந் தொடர்பாக கருத்து தெரிவித்த நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்,

 நாம் இன்றைய தினம் மக்களுக்கு எரிபொருளினை வழங்கியிருந்தோம் மக்களும் சிரமமின்றி எரிபொருளினை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

 இவ்வாறான நடைமுறையில்  இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் வாடிக்கையாளர்களின் வீண் சிரமத்தையும் ஏமாற்றத்தையும் தவிக்கும் முகமாகவே இவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்ததுடன் .

 ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் சுழற்சி முறையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும்  குறிப்பிடப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனையவர்கள் வருக தந்து ஏமாற்றம் அடைவதை தவிர்த்துக் கொள்ளவும் எனவும்   தெரிவித்தார் .

நாளைய தினம் சனிக்கிழமை பெட்ரோல் வழங்கப்படவுள்ள ஒழுங்கு முறையாவன , 

 J/303 - 09.00 am  to   09.30 am.  J/304,305 - 9.30 am  to 10.00 am J/306 - 10.00 am  to  10 30am  J/307,308 - 10.30 am  to  11.00 am. J/309 - 11.00 am  to  11.30 am  J/310 ,311 -11.30 am  to  12.00 pm  J/312,313 - 12.30 pm  to  01.00pm J314, 315 - 01.30 pm to  02.00 pm J/316 317 - 02.00 pm to 02.30 pm J/318,319  - 02.30 pm to 03.00 pm  J/321,320 -  03.00 pm to 03.15 pm      J/323,324-  03.15 pm  to  03.30 pm  J/325,326 - 03.45 pm to  03.45 pm    J/327,328 - 03.45 pm  to  04.00pm  J/329,330   -   04.oo pm  to04.30 pm

No comments