யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொன்னாலை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
அது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் உயிரிழந்தவரின் மகன் , சடலத்தை நேரில் பார்த்து தனது தந்தை என அடையாளம் காட்டினார்.
தனது தந்தையான ஆறுகால் மடத்தடியை சேர்ந்த கந்தசாமி சேகரன் எனவும் , கடந்த தீபாவளி தினம் முதல் காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உள்ளதாகவும் மகன் தெரிவித்தார்.
No comments