Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். தொடரும் மழை - 71 குடும்பங்கள் பாதிப்பு ; 08 வீடுகள் சேதம்


யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக, நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வரையில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

மழை காரணமாக, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10  குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும்,

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என மேலும் தெரிவித்தார். 

No comments