Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, July 15

Pages

Breaking News

யாழ்.உடுப்பிட்டி மதுபான சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி ஜனாதிபதிக்கு மகஜர்


யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கரவெட்டி பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 

உடுப்பிட்டி சந்தியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை ஆரம்பமான போராட்டம் , கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று , பிரதேச செயலரிடம் மகஜரை கையளித்தனர். 

மகஜரின் பிரதிகள் மதுவரித் திணைக்கள ஆணையாளர்,  நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், கரவெட்டி பிரதேச செயலகம் , கரவெட்டி பிரதேச சபை என்பவற்றுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று பிரதேச செயலாளர் செயற்படவேண்டும் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் புதன்கிழமை மதியம் வரை உடுப்பிட்டி பகுதியில் வர்த்தகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டு , போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.