யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து தம்பதி கடத்தப்பட்ட வேளை, கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது, சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments